Call Us : +91 97503 72227,98406 73369

மக்கள் அறக்கட்டளை உருவான விதம்

விண்ணை முட்டும் புகழின் உச்சியில் இருந்தாலும் என்றும் மாறா எளிமையை கடைபிடிப்பவர், மக்களின் இல்லத்திலும் உள்ளத்திலும் தனி இடம் கொடுக்கப்பட்டாலும் தலைக்கனம் இல்லா இலக்கணமாய் திகழ்பவர். கடின உழைப்பின் மூலம் உச்சம் தொட்டு உழைப்பின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தியவர். வஞ்சம் இல்லா நெஞ்சத்துடன் இருந்து வாழ்வின் ஏற்றத்திற்கும் மாற்றத்திற்கும் அடிப்படையான பண்புகளை கற்றுத் தந்தவர்.

இது போன்ற நற்பண்புகளை பயிற்றுவித்ததோடு ,பேசும் ஒவ்வொரு வார்த்தையின் மூலமும் தான் செய்யும் ஒவ்வொரு செயலின் மூலமும் நல்ல எண்ணங்களை எங்களுக்குள் விதைத்து ,மக்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படை தேவையான நீர் வளம் காப்பது உள்ளிட்ட சமூக நலன் சார்ந்த பல்வேறு நற்பணிகளை செய்ய மிகப்பெரிய தூண்டுகோலாகவும் இருந்து, மக்கள் அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக காரணமாக இருந்ததோடு மட்டுமல்லாமல்,மானசீக குருவாய் இருந்து எங்களை வழிநடத்தும் பெரு மதிப்பிற்குரிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி! JP சண்முகம், நிறுவனர்- மக்கள் அறக்கட்டளை.

மக்கள் அறக்கட்டளையின் நோக்கம்

குளங்கள், குட்டைகள், கண்மாய்கள் போன்ற நீர் ஆதாரங்களை தூர் வாருதல் மற்றும் ஆழப்படுத்தல், நீர் பாசன வாய்க்கால்களைச் செப்பனிடுதல், பண்ணை குட்டைகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் சரியான முறையில் நீர் மேலாண்மையை நடைமுறைப்படுத்தல்

மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படை தேவையான தும், பொருளாதார வளர்ச்சிக்கும்,வறுமை ஒழிப்பிற்கும் அவசியமானதுமான நீர் பற்றாக்குறையைத் தவிர்க்க முன்னெடுப்புகளை மேற்கொள்வது

விண்ணிலிருந்து மண்ணில் விழும் ஒவ்வொரு மழை நீர்த்துளியும் அவ்விடத்திலே சேமிக்கப்பட உதவும் மழை நீர் சேமிப்பு வழி முறைகளுக்கு உதவுதல்.

உபரி நீர் மேலாண்மை, நீர் மாசுபடுதலை தடுக்கும் முயற்சி ஆகியவற்றை ஊக்கப்படுத்தல்

நீர் சேமிப்பு மற்றும், நீர் மேலாண்மை பற்றிப் பயிற்சி தருதல்

ஆர்வமுள்ள தன்னார்வலர்களை இணைத்து மேம்பட்ட நீர் மேலாண்மை வழி முறைகளை உருவாக்குதல்

மண்ணின் தன்மை, சீதோஷன நிலை, காற்றின் வேகம் இவற்றை எல்லாம் கணக்கிட்டு பயிர்களுக்கு தேவையான நீரை மட்டும் கொடுப்பது போன்ற நல்ல விளைச்சல் கொடுக்கும் வழிமுறைகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தல் ,விளை பொருட்களை சந்தைப்படுத்த உதவுதல்

சுற்றுப்புற சூழல் மாசுபடுதலை தடுத்து,தூய்மையான ,சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்குதல்

இயற்கை வளம் காத்தல்

நோய்வரும் முன் காக்க இலவச மருத்துவ முகாம்கள் அமைத்தல்

பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கு உதவுதல்

ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு இல்லங்கள் அமைக்க உதவுதல்

தேவைப்படும் சமூக நலன் சார்ந்த மற்ற பணிகள்

தன்னார்வலர்கள் மக்கள் அறக்கட்டளையில் தங்களை இணைத்துக்கொள்ள கீழ்காணும் லிங்கில் தங்கள் விவரங்களை பதிவிடவும்